தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் தடையை மீறி திறந்த ஜெராக்ஸ் கடைக்கு சீல்


தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் தடையை மீறி திறந்த ஜெராக்ஸ் கடைக்கு சீல்
x
தினத்தந்தி 15 Jun 2021 6:48 AM IST (Updated: 15 Jun 2021 6:48 AM IST)
t-max-icont-min-icon

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் தடையை மீறி திறந்த ஜெராக்ஸ் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

ஊட்டி

ஊட்டி அரசு ஆஸ்பத்திரி சாலை கொரோனா பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் 14 நாட்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டது. மேலும் இங்கு கடைகள் திறக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. 

இந்த நிலையில் நேற்று தடையை மீறி ஜெராக்ஸ் கடை ஒன்று  செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் கடைக்கு சென்று கடையை மூடுமாறு தெரிவித்தனர். அப்போது கடை உரிமையாளர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார்.

 இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி தாசில்தார் குப்புராஜ் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் அரசு விதிமுறையை மீறி செயல்பட்ட ஜெராக்ஸ் கடையை மூடி சீல் வைத்தனர். மேலும் கடை உரிமையாளர் பாலசுப்பிரமணியம் மீது ஊட்டி நகர மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Next Story