கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வினியோகம்


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வினியோகம்
x
தினத்தந்தி 15 Jun 2021 6:48 AM IST (Updated: 15 Jun 2021 6:48 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வினியோகம்

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வினியோகம் செய்யும் பணி நேற்று தொடங்கியது.
புதிய கல்வி ஆண்டு
ஜூன் 1-ந் தேதி முதல் புதிய கல்வி ஆண்டு தொடங்கி உள்ளதால், மாணவர்களுக்கான கல்வி பணிகளை தொடங்க மாநில அரசு கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளன. இதையொட்டி அனைத்து பள்ளிகளிலும் நேற்று முதல் பள்ளியின் தலைமை ஆசிரியர், அலுவலக பணியாளர்கள் சென்று, மாணவர் சேர்க்கைக்கான பணிகள், மாற்றுச்சான்றிதழ் வழங்குதல், மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்கள், உதவி தலைமை ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் பணிக்கு வந்தனர்.
விண்ணப்பங்கள் வினியோகம்
அதன்படி, கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை 33 பேருக்கும், பிளஸ்-1 வகுப்பில் 66 பேருக்கும் பள்ளியில் சேர்வதற்கான விண்ணப்பங்களை தலைமை ஆசிரியர் மகேந்திரன் வழங்கினார்.
முன்னதாக பள்ளிக்கு வந்த மாணவிகள் மற்றும் பெற்றோர்களுக்கு உடல் வெப்ப அளவு கண்காணிக்கப்பட்டு, கிருமிநாசினி வழங்கப்பட்டு, சமூக இடைவெளியில் அமர வைக்கப்பட்டனர். மேலும் உதவி தலைமை ஆசிரியர் பசவராஜ் மற்றும் அலுவலக பணியார்கள் 11 பேர் பணிக்கு வந்திருந்தனர்.
=======

Next Story