பெரம்பூரில் மின்வாரிய அலுவலகம் முன் பொதுமக்கள் சாலை மறியல்


பெரம்பூரில் மின்வாரிய அலுவலகம் முன் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 15 Jun 2021 11:27 AM IST (Updated: 15 Jun 2021 11:27 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பூரில் மின்வாரிய அலுவலகம் முன் பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பெரம்பூர்,

சென்னை பெரம்பூர் பேப்பர் மில் சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு அந்த பகுதி பொதுமக்கள் நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். கொரோனா பரவல் காரணமாக மின்வாரிய ஊழியர்களால் வீடுகளில் மின் கணக்கீடு செய்ய முடியாததால் 2019-ம் ஆண்டு மே மாதம் கட்டிய மின் தொகையை கட்டும்படி மின்வாரியம் அறிவித்து உள்ளது. ஆனால் இந்த மாதம் உபயோகித்த மின்சாரத்தை விட 2019-ம் ஆண்டு அதிகளவில் உபயோகப்படுத்தி இருப்பதால் கூடுதலாக மின் கட்டணம் செலுத்த வேண்டியது இருப்பதாக கூறி அவர்கள் இந்த சாலை மறியலில் ஈடுபட்டு இருப்பதாக தெரிவித்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த புளியந்தோப்பு போலீஸ் துணை கமிஷனர் ராஜேஷ்கண்ணா, செம்பியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் துளசிமணி மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துபோக செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story