21 கிலோ கஞ்சாவுடன் கடத்தல் ஆசாமி சிக்கினார்


21 கிலோ கஞ்சாவுடன் கடத்தல் ஆசாமி சிக்கினார்
x
தினத்தந்தி 15 Jun 2021 8:47 PM IST (Updated: 15 Jun 2021 8:47 PM IST)
t-max-icont-min-icon

21 கிலோ கஞ்சாவுடன் கடத்தல் ஆசாமி சிக்கினார்

கோவை

கோவை நகரில் கல்லூரி மாணவர்கள், வடமாநில தொழிலாளர்கள் குடியிருக்கும் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் சிங்காநல்லூர் பகுதியில் ரெயிலில் இருந்து இறங்கிய ஒருவர் ஸ்கூட்டரின் பின்னால் ஒரு மூட்டையை ஏற்றிக் கொண்டு சென்றார். உடனே போலீசார் அவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது அந்த மூட்டையில் 21 கிலோ கஞ்சா இருந்தது. அதன் மதிப்பு ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் ஆகும். விசாரணையில் அவர், தேவாரத்தை சேர்ந்த ரமேஷ் (வயது44), என்பதும்,

 அவர் ஆந்திர மாநிலத்தில் இருந்து ரெயிலில் கஞ்சா கடத்தி வந்து சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ். காலனி பகுதியில் தங்கி விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

 அவரிடமிருந்து  21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலுக்கு பயன்படுத்திய ஸ்கூட்டரும் பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை பெரியநாயக்கன்பாளையம், துடியலூர் உள்ளிட்ட பகுதிக ளில் நேற்று போலீசார் ரோந்து சென்றனர். அப்போது ராக்கிபாளை யம் பிரிவு, வெள்ளக்கிணறு, மேட்டுப்பாளையம் காமராஜர் ரோடு உள்ளிட்ட இடங்களில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற வாலிபர்களை சந்தேகத்தின்பேரில் போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து கஞ்சா விற்றதாக மதுரை மாவட்டத்தை சேர்ந்த விக்னேஷ் (வயது18), ராக்கிபாளையத்தை சேர்ந்த பாலமுருகன் (20), கதிரேசன் (20), கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர் மந்திரமூர்த்தி (20), 

மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சுசாந்த் (21), ஜெகதீஷ் (20) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1½ கிலோ கஞ்சா, ரூ.850 மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story