ஆற்காடு அருகே கஞ்சா கடத்திய வாலிபர் கைது
ஆற்காடு அருகே கஞ்சா கடத்திய வாலிபர் கைது
ஆற்காடு
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு டவுன் போலீசார் நேற்று முன்தினம் மாலை ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் தனியார் கல்லூரி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வாலிபர் ஒருவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். இந்த சோதனையில் அந்த வாலிபரிடம் பேப்பரில் மடித்து வைக்கப்பட்டிருந்த 30 கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது.
விசாரணையில் அவர் ஆற்காடு அடுத்த சாத்தூர் கிராமத்தை சேர்ந்த புவனேஷ் (வயது 26) என்பதும், நேற்று முன்தினம் குடிபோதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றபோது ஆற்காடு அடுத்த கத்தியவாடி பகுதியில் சைக்கிளில் சென்ற 12 வயது சிறுவன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றதும் தெரியவந்தது. அதன்பேரில் அவரை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story