சாராயம் கடத்திய 5 பேர் கைது


சாராயம் கடத்திய 5 பேர் கைது
x
தினத்தந்தி 15 Jun 2021 10:01 PM IST (Updated: 15 Jun 2021 10:01 PM IST)
t-max-icont-min-icon

கீழ்வேளூர் பகுதியில் சாராயம் கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிக்கல்:
கீழ்வேளூர் போலீசார் கீழ்வேளூர்கடை வீதி, கானூர் சோதனை சாவடி பகுதிகளில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது வலிவலம், கோவில்கண்ணாப்பூர் வாடிதெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் குகன் (வயது 30), முத்துப்பேட்டை, உதயமார்த்தாண்டபுரம். காமராஜர் தெரு மாரிமுத்து மகன் வினோத் (29), திருவாரூர், தேவர்கண்டநல்லூர், பகுதியை சேர்ந்த சிவானந்தம் மகன் விஸ்வநாதன் (22), கொரடாச்சேரி, கண்கொடுத்தவனிதம், காலனி தெருவை சேர்ந்த சாமிநாதன் மகன் சண்முகநீதி (24). விளக்குடி ராயநல்லூரை சேர்ந்த பிச்சைகண்ணு மகன் தாம்சன் (29).ஆகிய 5 பேரும் மோட்டார் சைக்கிள்களில் காரைக்கால் மாவட்டம் வாஞ்சூர் பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வந்தது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து தலா 10 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 5 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.

Next Story