திருப்பூரில் மின் கட்டணம் செலுத்த குவிந்த பொதுமக்கள்
திருப்பூரில் மின் கட்டணம் செலுத்த குவிந்த பொதுமக்கள்
திருப்பூர்
கொரோனா பாதிப்பால் ஊரடங்கு கடந்த மாதம் முதல் தமிழகத்தில் அமல்படுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று குறைய தொடங்கியுள்ளதால், தமிழக அரசு ஊரடங்கில் சில தளர்வுகளை வழங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் நடமாட்டம் மாநகர் பகுதிகளில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதற்கிடையே கடந்த மாதம் மின்சார கட்டணம் செலுத்த பொதுமக்கள் பலரும் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் கணினி மையம் உள்ளிட்டவை பல இடங்களில் செயல்படவில்லை.
இதனால் பலரும் மின் கட்டணம் செலுத்த முடியாமல் இருந்து வந்தனர். தற்போது தளர்வு வழங்கிய நிலையில் நேற்று திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள உதவி மின்பொறியாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் பலரும் மின் கட்டணம் செலுத்த குவிந்தனர். மின் கணக்கீடும் கடந்த மாதம் செய்யாததால் எந்த வகையில் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற குளறுபடி இருந்ததால் பலரும் அங்கிருந்து பணியாளர்களை கேட்டனர். முறையாக அறிவிப்பு ஏதும் இல்லாததால் பொதுமக்கள் பலரும் அவதியடைந்தனர்.
Related Tags :
Next Story