நீலகிரி மாவட்டத்தின் முதல் கலெக்டர் ஜான் சல்லிவனின் 233-வது பிறந்தநாள் விழா


நீலகிரி மாவட்டத்தின் முதல் கலெக்டர் ஜான் சல்லிவனின் 233-வது பிறந்தநாள் விழா
x
தினத்தந்தி 15 Jun 2021 10:28 PM IST (Updated: 15 Jun 2021 10:28 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தின் முதல் கலெக்டர் ஜான் சல்லிவனின் 233-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

கோத்தகிரி

நீலகிரி மாவட்டத்தின் முதல் கலெக்டரான ஜான் சல்லிவன் 233-வது பிறந்த நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. ஆண்டுதோறும் அரசு விழாவாக நடைபெறும், இந்த நிகழ்ச்சி கொரோனா பரவல் எதிரொலி காரணமாக மிகவும் எளிமையாக நடைபெற்றது. 

இதையொட்டி கோத்தகிரி அருகே கன்னேரிமுக்கில் உள்ள ஜான் சல்லிவன் நினைவகத்தில் அவரது உருவச்சிலை அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா கலந்து கொண்டு ஜான் சல்லிவன் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து, அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், ஜான் சல்லிவன் 1818-ஆம் ஆண்டு கோவை மற்றும் நீலகிரியின் கலெக்டராக இருந்த போது, நீலகிரி மாவட்டத்தை கண்டு பிடித்து, கோத்தகிரியில் கலெக்டர் அலுவலகத்தை கட்டினார். 

பின்னர் 1822-ஆம் ஆண்டு ஊட்டி நகர் மற்றும் ஊட்டி எரியை நிர்மாணித்ததுடன், நீலகிரி மாவட்டத்தின் முதல் கலெக்டராகவும் பணியாற்றினார். மேலும் பணப்பயிர்களை அறிமுகப்படுத்தி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மக்களின் பொருளாதாரத்தை மேம்பட செய்தார்.

 அவரின் சேவையை நினைவுகூறும் வகையில் அவரது பிறந்த நாள் மற்றும் நினைவு தினம் ஆகியவை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட்டு வருகிறது என்றார்.

நிகழ்ச்சியில் தோட்டக்கலை இணை இயக்குனர் சிவசுப்ரமணியம் சாம்ராஜ், ஆயத்தீர்வை உதவி ஆணையர் மணி, கோத்தகிரி செயல் அலுவலர் மணிகண்டன், வட்டார வளர்ச்சி அலுவலர் நந்தகுமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன், தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் தீபக், ஜான் சல்லிவன் டிரஸ்ட் நிர்வாகிகள் ஆல்வாஸ், கக்கி சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story