கொரோனா நோயாளி தூக்குப்போட்டு தற்கொலை
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே தனியார் சிகிச்சை மையத்தில் கொரோனா நோயாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆண்டிப்பட்டி:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள எண்டபுளி புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 54). விவசாயி. இவரது மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. ஜெயராஜ் கடந்த 10 ஆண்டுகளாக வயிற்றுப்புண் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர் நேற்று முன்தினம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள தனியார் கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையில் இருந்த அவர் நேற்று மாலை மையத்தில் உள்ள தனி அறையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து க.விலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில் அவர் குழந்தைகள் இல்லாத காரணத்தினாலும், வயிற்றுப்புண் நோயால் அவதிப்பட்டதாலும் மனமுடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story