குளத்தில் மூழ்கி வாலிபர் பலி


குளத்தில் மூழ்கி வாலிபர் பலி
x
தினத்தந்தி 15 Jun 2021 10:49 PM IST (Updated: 15 Jun 2021 10:49 PM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் நண்பர்களுடன் குளிக்க சென்ற வாலிபர் குளத்தில் மூழ்கி பலியாகினார்.

புதுக்கோட்டை, ஜூன்.16-
புதுக்கோட்டையில் நண்பர்களுடன் குளிக்க சென்ற வாலிபர் குளத்தில் மூழ்கி பலியாகினார். பொன்னமராவதியில் போதையில் கிணற்றில் குளித்தவர் பரிதாபமாக இறந்தார்.
வாலிபர் பலி
புதுக்கோட்டையை சேர்ந்தவர் அப்துல்ரகுமான் (வயது24). வெல்டிங் தொழிலாளியான இவர் நேற்று தனது நண்பர்களுடன் திருக்கோகர்ணத்தில் குன்ன வயலில் உள்ள மலை அடிவார குளத்தில் குளிக்க சென்றார். அங்கு குளித்து கொண்டிருந்த போது அப்துல்ரகுமான் தண்ணீரில் மூழ்கி இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த திருக்கோகர்ணம் போலீசார் விரைந்து வந்தனர். மேலும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரில் மூழ்கிய அப்துல் ரகுமானின் உடலை  மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
மேலும் இந்த சம்பவம் குறித்து திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதே இடத்தில் கடந்த 2019-ம் ஆண்டு ஒருவர் மூழ்கி இறந்ததாக போலீசார் தெரிவித்தனர். குளிக்க சென்ற வாலிபர் தண்ணீரில் மூழ்கி இறந்தது அவரது குடும்பத்தினரிடையேயும், நண்பர்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
பொன்னமராவதி
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியம் கிழவயலைச் சேர்ந்தவர் முருகன் (44). கருத்துவேறுபாடுகாரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து முருகன் தனியாக வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்று மாலையில் அவர் குளிப்பதற்காக அவர் அங்குள்ள கிணற்று சென்றார்.
அப்போது, அவர் மதுபோதையில் இருந்தார். இந்தநிலையில் அவர் கிணற்றுக்குள் குதித்தபோது, மீண்டும்வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதியினர் பொன்னமராவதி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
கிணற்றுக்குள் மூழ்கி சாவு
நிலைய அலுவலர் சந்தானம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மோட்டார் பம்பு மூலம் கிணற்றில் உள்ள தண்ணீரை வெளியேற்றினர். அப்போது, முருகன் கிணற்று தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. பின்னர் உடலை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக உலகம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கலாராணி, சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story