22 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.1 கோடியில் வேளாண் கருவிகள். அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்


22 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.1 கோடியில் வேளாண் கருவிகள். அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்
x
தினத்தந்தி 15 Jun 2021 11:07 PM IST (Updated: 15 Jun 2021 11:07 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூரில் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள வேளாண் கருவிகளை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.

திருப்பத்தூர்

உழவர் உற்பத்தியாளர் குழு

தமிழக அரசு வேளாண் உழவர் நலத்துறை சார்பில் சிறு, குறு விவசாயிகள் ஒருங்கிணைந்த நவீன விவசாய தொழில்நுட்பங்களை மேற்கொள்ளவும், நவீன வேளாண் கருவிகளை உபயோகித்து உற்பத்தியை பெருக்கி கொள்ள, உற்பத்தி செய்த விளை பொருட்களை மதிப்புக் கூட்டி விற்பனை செய்து வருமானத்தை பெருக்கும் நோக்கத்தோடு கூட்டுப்பண்ணை திட்டத்தை  செயல்படுத்தி வருகிறது. 

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், கந்திலி, ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி, ஆலங்காயம், மாதனூர் ஆகிய 6 வட்டாரங்களில் 22 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் 2,200 விவசாயிகளை கொண்டு அமைக்கப்பட்டு, கூட்டுப் பண்ணை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

அமைச்சர் ஆர்.காந்தி  வழங்கினார்

இந்த 22 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் மூலதன நிதியாக ரூ.1 கோடியே 10 லட்சம் நிதி மூலம் டிராக்டர்கள், வேளாண் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, டிராக்டர்கள் மற்றும் வேளாண் கருவிகளை வழங்கி பேசினார்.

Next Story