நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சன்ற போலீசார்
ஊரடங்கால் கார், ஆட்டோ இயங்காத நிலையில் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையை ரோந்து வாகனத்தில் போலீசார் மருத்துவமனைக்கு அழைத்து சன்றனர். இதனால் போலீசாருக்கு சூப்பிரண்டு பாராட்டு தெரிவித்தார்.
நன்னிலம்;
ஊரடங்கால் கார், ஆட்டோ இயங்காத நிலையில் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையை ரோந்து வாகனத்தில் போலீசார் மருத்துவமனைக்கு அழைத்து சன்றனர். இதனால் போலீசாருக்கு சூப்பிரண்டு பாராட்டு தெரிவித்தார்.
குழந்தைக்கு உடல் நலக்குறைவு
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள சன்னாநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி. இவரது மனைவி மெல்மா. இவரது குழந்தை சுகன்யாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டு உடல்நலக் குறைவால் மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றனர். சன்னாநல்லூர் பஸ் நிறுத்தம் அருகே இவர்கள் சென்ற போது மோட்டார் சைக்கிள் பழுதடைந்து நின்றது. இந்நேரத்தில் திடீரென குழந்தைக்கு வலிப்பு ஏற்பட்டு ஆபத்தான நிலைக்கு சென்றது.
சிகிச்சை
இந்தநிலையில் ஊரடங்கு நேரத்தில் ஆட்டோ, கார் ஏதுவும் இல்லாத நிலையில் குழந்தையை கையில் வைத்து கொண்டு முத்துக்குமாரசாமியும் அவரது மனைவியும் கதறி அழுதனர். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் உடனடியாக ரோந்து வாகனத்தில் குழந்தையை அழைத்துக்கொண்டு நன்னிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.
பாராட்டு
மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு பின் குழந்தை உடல் நலம் பெற்றது. இது குறித்த செய்தி படத்துடன் தினத்தந்தியில் வெளியானது. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட போலீசாரை நேரில் அழைத்த திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.500 மற்றும் சான்றிதழையும் வழங்கி பாராட்டினார்.
Related Tags :
Next Story