மீன் பிடிக்க விசைப்படகு மீனவர்கள் செல்லவில்லை


மீன் பிடிக்க விசைப்படகு மீனவர்கள் செல்லவில்லை
x
தினத்தந்தி 15 Jun 2021 11:22 PM IST (Updated: 15 Jun 2021 11:22 PM IST)
t-max-icont-min-icon

தடைகாலம் முடிவடைந்த நிலையில் மண்டபம் பகுதியில் இருந்து மீன் பிடிக்க விசைப்படகு மீனவர்கள் செல்லவில்லை.

பனைக்குளம், 
தடைகாலம் முடிவடைந்த நிலையில் மண்டபம் பகுதியில் இருந்து மீன் பிடிக்க விசைப்படகு மீனவர்கள் செல்லவில்லை.
தடை
தமிழகம் முழுவதும் உள்ள கடல் பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 14-ந்தேதி வரையிலும் மீன்கள் இனப்பெருக்க காலமாக உள்ளதால் இந்த 61 நாட்கள் மட்டும் விசைப ்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல அரசால் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதுபோல் இந்த ஆண்டின் தடைக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் 15-ந் தேதி அன்று தொடங்கியது. 61 நாள் தடை காலம் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில்  தடை காலம் முடிவடைந்த நிலையில் மண்டபம் பகுதியில் உள்ள விசைப்படகுகள் கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு முழு ஊரடங்கு காரணமாக கரையில் ஏற்றி வைக்கப்பட்ட படகுகளின் மராமத்து பணிகள் முழுமையாக முடிவடை யாத காரணத்தால் வருகிற 30-ந் தேதி முதல் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து மண்டபம் விசைப்படகு மீனவர் சங்க தலைவர் பாலன் கூறியதாவது:- மண்டபத்தில் உள்ள விசைப்படகு மீனவர்கள் வருகிற 30-ந் தேதி முதல் மீன்பிடிக்க செல்ல முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
உபகரணங்கள்
இந்தநிலையில் தடை காலம் முடிவடைந்ததை தொடர்ந்து பாம்பனில் உள்ள விசைப்படகு மீனவர்கள் வழக்கம் போல் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல உள்ளனர். மீன்பிடிக்க செல்ல உள்ளதையொட்டி கடற்கரையில் ஏற்றி வைக்கப்பட்டு இருந்த படகுகளை கடலில் இறக்கி வைத்து படகில் மீன் பிடி வலை டீசல் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்கள் மற்றும் சாதனங்களையும் நேற்று முதல் ஏற்றும் பணியில் மீனவர்கள் தீவிர மாகவும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.
ராமேசுவரம், மண்டபம் பகுதியில் உள்ள விசைப்படகு மீனவர்கள் 30-ந் தேதி முதல் மீன்பிடிக்க செல்ல முடிவு செய்துள்ள நிலையில் ராமநாத புரம் மாவட்டம் சாயல்குடி, மூக்கையூர் பகுதியில் உள்ள விசைப்படகு மீனவர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே மீன்பிடிக்க கடலுக்கு சென்று விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story