10 பேர் மீது வழக்கு


10 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 15 Jun 2021 5:58 PM GMT (Updated: 2021-06-15T23:28:08+05:30)

காரைக்குடியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 10 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.

காரைக்குடி,

காரைக்குடி செஞ்சை பள்ளிவாசல் அருகே அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில், லட்சத்தீவின் பண்பாட்டை சீரழிக்காதே,  லட்சத்தீவில் நிர்வாகத்தில் இருக்கும் பிரபுல் படேலை திரும்பப் பெறு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நகர துணைச்செயலாளர் ராஜா தலைமை தாங்கினார்.அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக காரைக்குடி தெற்கு போலீசார் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நகர துணை செயலாளர் ராஜா உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.


Next Story