புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.7 கோடிக்கு மது விற்பனை


புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.7 கோடிக்கு மது விற்பனை
x
தினத்தந்தி 15 Jun 2021 6:02 PM GMT (Updated: 15 Jun 2021 6:02 PM GMT)

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.7 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகின.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.7 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகின. வழக்கத்தை விட இரு மடங்கு விற்பனையாகி உள்ளன.
டாஸ்மாக் கடைகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் 144 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கின் காரணமாக கடந்த மே மாதம் 10-ந் தேதி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. ஊரடங்கில் அளிக்கப்பட்ட தளர்வின் காரணமாக மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.  ஒரு மாதத்திற்கு மேலாக பூட்டப்பட்ட டாஸ்மாக் கடைகள் நேற்று முன்தினம் திறக்கப்பட்டதால் மதுபானம் வாங்க மதுப்பிரியர்கள் கடை முன்பு குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபானங்களை வாங்கி சென்றனர். குறிப்பாக கிராமப்புறங்களில் மதுப்பிரியர்கள் கூட்டம் அலைமோதியது.
பக்கத்து மாவட்டமான தஞ்சாவூரில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாததால் புதுக்கோட்டை மாவட்ட எல்லைப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் அம்மாவட்ட மக்கள் படையெடுத்து வந்தனர். இதனால் டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்பனை களைகட்டியது.
ஒரே நாளில் ரூ.7 கோடிக்கு விற்பனை
புதுக்கோட்டை மாவட்டத்தையொட்டி எல்லைப்பகுதியில் மொத்தம் 18 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகள் அனைத்திலும் மதுபானங்கள் விற்பனை படுஜோராக நடைபெற்றது. மதுபானங்கள் பெருமளவு காலியாகின.
மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் ரூ.7 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானதாக டாஸ்மாக் வட்டாரத்தில் தெரிவித்தனர்.

Next Story