குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்
குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்
குளித்தலை
கரூர் மாவட்டம் குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமை கரூர் மாவட்ட நீதிபதி கிரிஸ்டோபர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், கொரோனா நோய் பரவலை தடுக்க தடுப்பூசி போட்டுக்கொள்வதை தவிர வேறுவழி இல்லை. அனைத்து மருந்துகளுக்கும் பக்கவிளைவுகள் இருக்கின்றன. அதற்காக தடுப்பூசி போடுவதை தவிர்க்க கூடாது. அனைவரும் இதுபோன்ற முகாம்களை பயன்படுத்தி தடுப்பூசி போட்டுக்கொண்டு பயன்பெற வேண்டுமென கூறினார். இதில் குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்ற அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர், வக்கீல்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இந்த முகாமில் குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதிகள், சண்முககனி (சார்புநீதிமன்றம்), பாலமுருகன் (மாவட்ட உரிமையியல் நீதிமன்றம்), பாக்கியராஜ் (குற்றவியல் நடுவர்), அரசு மருத்துவர்கள் சிவக்குமார், அமீர்தீன், வக்கீல்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story