நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 306 பேருக்கு கொரோனா-பாதிப்பு எண்ணிக்கை 40,750 ஆக அதிகரிப்பு


நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 306 பேருக்கு கொரோனா-பாதிப்பு எண்ணிக்கை 40,750 ஆக அதிகரிப்பு
x
தினத்தந்தி 16 Jun 2021 12:07 AM IST (Updated: 16 Jun 2021 12:07 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 306 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,750 ஆக அதிகரித்துள்ளது.

நாமக்கல்:
306 பேருக்கு கொரோனா
தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 40 ஆயிரத்து 443 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையே பிற மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 444 ஆக அதிகரித்தது.
இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் மேலும் 306 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 750 ஆக அதிகரித்து உள்ளது.
உயிரிழப்பு இல்லை
இதற்கிடையே நேற்று 624 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 36 ஆயிரத்து 773 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 357 பேர் இறந்து விட்ட நிலையில், 3,620 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 1½ மாதத்திற்கு மேல் கொரோனா உயிரிழப்பு தினமும் பதிவாகி வந்த நிலையில், நேற்று கொரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை. இது சற்று ஆறுதலாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

Next Story