வீரவநல்லூர் அருகே 3 பேருக்கு அரிவாள் வெட்டு


வீரவநல்லூர் அருகே  3 பேருக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 16 Jun 2021 12:38 AM IST (Updated: 16 Jun 2021 12:38 AM IST)
t-max-icont-min-icon

வீரவநல்லூர் அருகே 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

சேரன்மாதேவி:

வீரவநல்லூர் அருகே உள்ள திருப்புடைமருதூர் சன்னதி தெருவைச் சேர்ந்தவர் இளமுருகன் மகன் சுந்தர்ராஜ் (வயது 26), விவசாயி. இவரும், இவரது உறவினருமான சுப்பையா மகன் முத்துராமன் (31) என்பவரும் நேற்று முன்தினம் இரவு வெள்ளாங்குழியில் உள்ள புரோட்டா கடைக்கு சென்றுள்ளனர். அப்போது இவர்களுக்கும், கொட்டாரகுறிச்சி பகுதியை சேர்ந்த உச்சிமாகாளி மகன் சங்கர் கணேஷ் (30) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த சங்கர் கணேஷ் மற்றும் அவரது கூட்டாளிகளான அதே பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் மகாராஜன் (31), வீரவநல்லூர் பகுதியைச் சேர்ந்த கொக்கி குமார் ஆகியோருடன் சேர்ந்து கொட்டாரக்குறிச்சி பஸ் நிறுத்தம் அருகில் சுந்தர்ராஜ், முத்துராமன், அவரது உறவினரான பேச்சிகுட்டி (56) ஆகியோரை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த 3 பேரும் சேரன்மாதேவி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுதொடர்பாக வீரவநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள சங்கர் கணேஷ் உள்ளிட்டவர்களை தேடிவருகிறார்கள். 

Next Story