பலி எண்ணிக்கை 500-ஐ கடந்தது
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 178 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் பலி எண்ணிக்கை 500-ஐ கடந்தது.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 178 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் பலி எண்ணிக்கை 500-ஐ கடந்தது.
உயர்வு
மாவட்டத்தில் 178 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 43,075 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 40,289 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 425 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 2,286 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
3 பேர் பலி
நேற்று நோய் பாதிப்பிற்கு மேலும் 3 பேர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 501 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் 1,478 படுக்கைகள் உள்ள நிலையில் 569 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 909 படுக்கைகள் காலியாக உள்ளன. சிகிச்சை மையங்களில் 1,753 படுக்கைகள் உள்ள நிலையில் 302 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,451 படுக்கைகள் காலியாக உள்ளன.
பாதிப்பு
விருதுநகர் நந்தவனம்தெரு, நகராட்சி காலனி, ராமமூர்த்தி ரோடு, சூலக்கரை, ரோசல்பட்டி ரோடு, மெட்டுகுண்டு, பாண்டியன் நகர், அழகாபுரி, கன்னிசேரி, மணிநகர், மீசலூர், கே.கே.எஸ்.எஸ்.என். நகர், துலுக்கப்பட்டி, லட்சுமி நகர், என்.ஜி.ஓ. காலனி, பெத்தனாட்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் மல்லி, எரிச்சநத்தம், வலையங்குளம், காடனேரி, கீழாண்மறை நாடு, சாத்தூர், சித்தம் பட்டி, பந்தல்குடி, சித்தலகுண்டு, காரியாபட்டி, மல்லாங்கிணறு, எம்.ரெட்டியபட்டி, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், அருப்புக்கோட்டை, வெம்பக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று மாவட்ட பட்டியலில் 107 பேருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாநிலப்பட்டியலில் 178 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிப்பு சதவீதம் 4.5ஆக உள்ளது.
Related Tags :
Next Story