விளாத்திகுளம் அருகே வேளாண் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
விளாத்திகுளம் அருகே வேளாண் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
விளாத்திகுளம்:
மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு அரசு அறிவித்த வெள்ள நிவாரணத்தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி விளாத்திகுளம் அருகேயுள்ள புதூர் வேளாண் விரிவாக்க மையத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் தலைமை தாங்கினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “கொரோனா முதல் அலை பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு முற்றிலும் விவசாயம் பொய்த்து போய்விட்டது. தற்போது கொரோனா 2-வது அலை காரணமாக வேலை இல்லாமல் வாழ்வாதாரம் இன்றி பரிதவித்து வருகிறோம். இன்னும் ஓரிரு மாதங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால், நிலங்களில் உழவுப்பணி உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும். இதற்கு போதிய நிதி ஆதாரம் இல்லாமல் செய்வதறியாமல் தவித்து வருகிறோம். எனவே, மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து தோட்டக்கலை பயிர்களுக்கான நிவாரணத்தொகையை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்க வேண்டும்” என்றார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் சமசர பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story