காய்கறி வியாபாரியை தாக்கிய 2 பேர் கைது


காய்கறி வியாபாரியை தாக்கிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 16 Jun 2021 12:55 AM IST (Updated: 16 Jun 2021 12:55 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் காய்கறி வியாபாரியை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர், 
விருதுநகர் முத்துராமன் பட்டி சிவந்திபுரம் ஆத்துமேட்டு பகுதியை சேர்ந்தவர் பிச்சை மூர்த்தி (வயது 41). காய்கறி வியாபாரியான இவரது மைத்துனர் பெரியசாமிக்கும், அருகில் உள்ள வீட்டில் உள்ளவர்களுக்கும் பிரச்சினை இருந்து வந்த நிலையில் நேற்று பிச்சை மூர்த்தி அப்பகுதியில் உள்ள ஒரு டீக்கடை அருகில் இதுபற்றி பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த அதே பகுதியை சேர்ந்த அருண்குமார்(21) மற்றும் சங்கர் (24) ஆகிய இருவரும் பிச்சை மூர்த்தியை தாக்கி படுகாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த பிச்சை மூர்த்தி சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுபற்றி அவர் கொடுத்த புகாரின் பேரில் இந்நகர் கிழக்கு போலீசார் அருண்குமார் மற்றும் சங்கரை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Next Story