போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்


போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
x
தினத்தந்தி 16 Jun 2021 12:59 AM IST (Updated: 16 Jun 2021 12:59 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் போலீஸ் இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவின்குமார் அபிநபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் போலீஸ் இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவின்குமார் அபிநபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இடமாற்றம்

நெல்லை மாவட்டம் வள்ளியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ், ஊத்துமலைக்கும், தூத்துக்குடி பி.இ.டபிள்யூ இன்ஸ்பெக்டர் ரோஸ்லின் சேவியோ, தென்காசி சிறுவர்களுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவுக்கும், கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை இன்ஸ்பெக்டர் பட்டாணி, சங்கரன்கோவில் குற்றப்பிரிவிற்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

நெல்லை மேலப்பாளையம் இன்ஸ்பெக்டர் மனோகரன், சிவகிரிக்கும், நெல்லை சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி தென்காசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், நெல்லை சந்திப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி, சங்கரன்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

சங்கரன்கோவில்

வடமதுரை இன்ஸ்பெக்டர் சுரேஷ், சுரண்டை போலீஸ் நிலையத்திற்கும், நெல்லை ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் மார்ட்டின் தென்காசி ஆயுதப்படைக்கும், நெல்லை மாநகர ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் சந்தனகுமார் சங்கரன்கோவில் போக்குவரத்து போலீஸ் நிலையத்திற்கும், திருவட்டார் இன்ஸ்பெக்டர் சியாம் சுந்தர் செங்கோட்டை போலீஸ் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story