சூதாடிய 11 பேர் கைது


சூதாடிய 11 பேர் கைது
x
தினத்தந்தி 16 Jun 2021 1:18 AM IST (Updated: 16 Jun 2021 1:18 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி பகுதியில் சூதாடிய 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிவகாசி, 
சிவகாசி மாரனேரி சப்-இன்ஸ்பெக்டர் வேல்சாமி நதிக்குடி கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்குள்ள கண்மாய் கரையில் சிலர் காசு வைத்து சீட்டு விளையாடிக்கொண்டிருந்தனர். அங்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் அதே பகுதியை சேர்ந்த முருகன் (வயது 36), முத்துப்பாண்டி (38), வைரமுத்து (39), சுப்பையா முத்துப்பாண்டி (51), விஜயகுமார் ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.5190-ஐ பறிமுதல் செய்தனர். இதேபோல் சப்-இன்ஸ்பெக்டர் ஆத்தீஸ்வரன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது கருப்பசாமி கோவில் அருகில் காசு வைத்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்த செல்வம் (39), கருப்பசாமி (30), கருப்பசாமி (42), முருகன் (33), பாலகிருஷ்ணன் (43), முனியாண்டி (40) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5300 பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story