கல்லிடைக்குறிச்சி அருகே பயங்கரம்: கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் வெட்டிக்கொலை 3 பேர் கைது-பரபரப்பு தகவல்


கல்லிடைக்குறிச்சி அருகே பயங்கரம்:  கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் வெட்டிக்கொலை  3 பேர் கைது-பரபரப்பு தகவல்
x
தினத்தந்தி 16 Jun 2021 1:32 AM IST (Updated: 16 Jun 2021 1:32 AM IST)
t-max-icont-min-icon

கல்லிடைக்குறிச்சி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

அம்பை:
கல்லிடைக்குறிச்சி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தொழிலாளி

நெல்லை மாவட்டம் அம்பை தாலுகா  கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள தெற்கு பாப்பான்குளம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் இசக்கிமுத்து என்ற துரைசாமி. இவரது மகன் வேல் (வயது 31). தொழிலாளியான இவர் மும்பையில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேல் தனது சொந்த ஊருக்கு வந்தார். நேற்று முன்தினம் இரவு அவர் அயன்சிங்கம்பட்டியில் உள்ள தனது சகோதரியின் வீட்டுக்கு சென்றுவிட்டு மோட்டார்சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார்.

சரமாரி வெட்டிக்கொலை

கல்லிடைக்குறிச்சி அருகே பாப்பாங்குளம் நாலுமுக்கு ரோட்டில் வந்தபோது மர்ம கும்பல் வேலுவை வழிமறித்தது. திடீரென அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வேலுவை சரமாரியாக வெட்டினார்கள். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார்.

இந்த பயங்கர கொலை குறித்து  தகவல்  அறிந்ததும் கல்லிடைக்குறிச்சி  போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பரபரப்பு தகவல்

இதற்கிடையே, இந்த கொலை தொடர்பாக 3 பேர் கொண்ட கும்பல் கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர். போலீசாரின் விசாரணையில் அவர்கள், அதே பகுதியை சேர்ந்த பிச்சைக்கண்ணு மகன்கள் சுதாகர் (34), சுடலைமுத்து (30) மற்றும் முருகன் மகன் இசக்கிமுத்து (22) ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும், அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதுபற்றி விவரம் வருமாறு:-

கொலை செய்யப்பட்ட வேலுக்கும், சுதாகர் மனைவி மணிமேகலைக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதனை அறிந்த சுதாகர் தனது மனைவியை கண்டித்துள்ளார். ஆனால், அதன் பின்னரும் மணிமேகலை தனது கள்ளக்காதலை கைவிடவில்லை. இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர்.

3 பேர் கைது

பின்னர் மணிமேகலை, வேலுடன் மும்பைக்கு சென்று வசித்து வந்தார். இந்த நிலையில்தான் வேல் சொந்த ஊருக்கு வந்திருந்ததை அறிந்த சுதாகர், அவரை கொலை செய்ய திட்டம் தீட்டினார். அதன்படி நேற்று முன்தினம் இரவு அயன்சிங்கம்பட்டிக்கு சென்றுவிட்டு திரும்பிய வேலுவை வழிமறித்து சுதாகர் உள்ளிட்ட 3 பேரும் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுதாகர், சுடலைமுத்து, இசக்கிமுத்து ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் வெட்டிக்கொைல செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story