வங்கி முன்பு சமூக இடைவெளியின்றி காத்திருந்த வாடிக்கையாளர்கள்
வங்கி முன்பு சமூக இடைவெளியின்றி வாடிக்கையாளர்கள் காத்திருந்தனர்.
மங்களமேடு:
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளது. சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்க பொதுமக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அகரம் சீகூர் பகுதியில் உள்ள ஒரு வங்கி முன்பு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளி இல்லாமல் ஒருவர் மீது ஒருவர் உரசியபடியே கூட்டமாக காத்திருந்தனர். சமூக இடைவெளியை கடைபிடிக்க வங்கி ஊழியர்கள் அறிவுறுத்தியும், வாடிக்கையாளர்கள் விதிமுறைகளை கடைபிடிக்கவில்லை. இது பற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில், இதேபோல் பெரும்பாலான வங்கிகளில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் வாடிக்கையாளர்கள் நிற்பதாகவும், எனவே ஒரு நாளைக்கு 10 முதல் 20 பேர் மட்டும் வங்கிக்கு வர வேண்டும் என்று தெரிவித்து, அவர்களுக்கு பரிவர்த்தனை செய்ய அனுமதிப்பதற்கான டோக்கன் முறையை செயல்படுத்தினால், வங்கிகள் முன்பு அதிகமாக வாடிக்கையாளர்கள் கூடுவதை தவிர்க்கலாம்,.என்றனர்.
Related Tags :
Next Story