செக்கானூர் கதவணை மின்நிலையத்தில் ஆகாயத்தாமரைகளால் மின் உற்பத்தி பாதிப்பு


செக்கானூர் கதவணை மின்நிலையத்தில்  ஆகாயத்தாமரைகளால் மின் உற்பத்தி பாதிப்பு
x
தினத்தந்தி 16 Jun 2021 3:52 AM IST (Updated: 16 Jun 2021 3:52 AM IST)
t-max-icont-min-icon

செக்கானூர் கதவணை மின்நிலையத்தில் ஆகாயத்தாமரைகளால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

மேட்டூர்:
மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் வெளியேறும் காவிரி ஆற்றின் குறுக்கே மேட்டூரை அடுத்த செக்கானூர் பகுதியில் கதவணை மின் நிலையம் உள்ளது. இங்கு 30 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது காவிரி ஆற்றில் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் செக்கானூர் பகுதியில் அமைந்துள்ள கதவணை மின்நிலையத்தில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
ஆனால் கதவணையில் உள்ள காவிரி ஆற்றில் ஏராளமான ஆகாயத்தாமரைகள் நிறைந்து காணப்படுகின்றன. இதனால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆகாயத்தாமரைகளால் 30 மெகாவாட் மின்சாரத்துக்கும் குறைவாகவே மின் உற்பத்தி நடந்து வருகிறது. எப்போதும் ஒப்பந்த தொழிலாளர்கள் மூலம் இந்த கதவணை மின் நிலையத்தை சூழ்ந்துள்ள ஆகாய தாமரைகளை அகற்றும் பணி நடைபெறுவது வழக்கம். ஆனால் தற்போது இந்த ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றும் நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணி விறுவிறுப்பாக நடக்காததால், மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story