உடல்நலக்குறைவால் தாய் சாவு: சிறுவனை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த போலீசார்


உடல்நலக்குறைவால் தாய் சாவு: சிறுவனை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த போலீசார்
x
தினத்தந்தி 16 Jun 2021 5:05 AM IST (Updated: 16 Jun 2021 5:05 AM IST)
t-max-icont-min-icon

உடல்நலக்குறைவால் தாய் இறந்ததை அடுத்து, அவரது 14 வயது மகனான சிறுவனை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

சூரமங்கலம்:
சேலம் இரும்பாலையை அடுத்த கே.ஆர்.தோப்பூரை சேர்ந்தவர் கமலா (வயது 50). இவரது மகன் ஆறுமுகம் (14). இவர்கள் 2 பேரும்  இரும்பாலை மெயின் கேட் அருகே உள்ள பயணிகள் நிழற்குடையில் பல மாதங்களாக வசித்து வந்தனர். இந்த நிலையில் காசநோயால் அவதிப்பட்ட கமலா நேற்று மாலை இறந்துவிட்டார், இது குறித்து தகவலறிந்த இரும்பாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகலா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் மலர்விழி உள்பட போலீசார் கமலாவின் உடலை மீட்டு தனியார் அறக்கட்டளை மூலமாக அடக்கம் செய்தனர். மேலும் அனாதையாக இருந்த சிறுவன் ஆறுமுகத்தை மீட்ட இரும்பாலை போலீசார், அவனுக்கு துணிகள் வாங்கி கொடுத்து கையில் பணமும் கொடுத்தனர். மேலும் சேலத்தில் உள்ள காப்பகத்தில் சிறுவனை ஒப்படைத்தனர்.

Next Story