வாலிபர் கொலை வழக்கில் தலைமறைவான 5 பேர் கைது


வாலிபர் கொலை வழக்கில் தலைமறைவான 5 பேர் கைது
x
தினத்தந்தி 16 Jun 2021 9:16 AM IST (Updated: 16 Jun 2021 9:16 AM IST)
t-max-icont-min-icon

ஆவடியில் வாலிபர் கொலை வழக்கில் தலைமறைவான 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆவடி, 

ஆவடி அடுத்த பட்டாபிராம் உழைப்பாளர் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் பிரசாந்த்குமார் (வயது 25). நேற்று முன்தினம் மாலை போதையில் ஏற்பட்ட தகராறில் 5 பேர் கொண்ட கும்பலால் அடித்து படுகொலை செய்யப்பட்டார்.

இது குறித்து பட்டாபிராம் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை தேடி வந்தனர். இதையடுத்து பிரசாந்த்குமாரை அடித்து கொலை செய்த வழக்கில் பட்டாபிராம் அம்பேத்கர் நகரை சேர்ந்த அஜித் (வயது 25), முகேஷ் (22), சாய் ஆதித் (22), ஜூலி (22), வினோத் (37) ஆகிய 5 பேரை நேற்று காலை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், காந்தி நகர் அருகே ஏரிக்கரையில் மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் பிரசாந்த்குமார் அஜீத்தை தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அஜித் உட்பட 5 பேரும் பிரசாந்த்குமாரை பீர் பாட்டிலால் சரமாரியாக தாக்கி படுகொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட 5 பேரையும் பட்டாபிராம் போலீசார் கைது செய்து நேற்று திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story