கும்மிடிப்பூண்டியில் குட்கா பதுக்கியவர் கைது


கும்மிடிப்பூண்டியில் குட்கா பதுக்கியவர் கைது
x
தினத்தந்தி 16 Jun 2021 9:46 AM IST (Updated: 16 Jun 2021 9:46 AM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டியில் குட்கா பதுக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பெருமளவில் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தொடர்ந்து பல்வேறு புகார்கள் வந்தன. இதனையடுத்து நேற்று கும்மிடிப்பூண்டி பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு கடையில் சந்தேகத்தின் பேரில் கும்மிடிப்பூண்டி போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் மூட்டை மூட்டையாக விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. சுமார் 60 கிலோ எடை கொண்ட குட்கா பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.20 ஆயிரம் ஆகும்.

இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து குட்கா பொருட்களை கடையில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த கும்மிடிப்பூண்டியை சேர்ந்த அரிகிருஷ்ணன் (வயது 60) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவரிடம் இருந்து குட்கா பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story