திருநின்றவூர், வெங்கத்தூரில் ரேஷன்கார்டுதாரர்களுக்கு மளிகை பொருட்கள்


திருநின்றவூர், வெங்கத்தூரில் ரேஷன்கார்டுதாரர்களுக்கு மளிகை பொருட்கள்
x
தினத்தந்தி 16 Jun 2021 10:42 AM IST (Updated: 16 Jun 2021 10:42 AM IST)
t-max-icont-min-icon

திருநின்றவூர், வெங்கத்தூரில் ரேஷன்கார்டுதாரர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

ஆவடி, 

திருவள்ளுர் மாவட்டம் ஆவடி அடுத்த திருநின்றவூர் நாச்சியார்சத்திரம் பகுதியில் உள்ள ரேஷன் கடையில், கூட்டுறவுத்துறை வாயிலாக ரேஷன்கார்டுதார்களுக்கு கொரோனா சிறப்பு நிவாரண நிதி 2-வது தவணை ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை பால்வளத்துறை அமைச்சா் சா.மு.நாசர் நேற்று வழங்கினார்.

அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி மற்றும் பூந்தமல்லி, பொன்னேரி, திருத்தணி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

திருவள்ளூரை அடுத்த வெங்கத்தூர் பாரதியார் தெரு, பெரியகுப்பம் காமராஜபுரம், பாரதிதாசன் தெரு போன்ற பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண 2-வது தவணை தொகை ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். தி.மு.க. மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் திராவிடபக்தன், மனோகரன், இளைஞரணி அமைப்பாளர் மோகனசுந்தரம், நந்தகோபால், ராமதாஸ், ராயப்பன், ஆனந்தன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் உடன் இருந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் தாமரைப்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கூட்டுறவு சங்க தலைவர் ஸ்ரீபதி தலைமை தாங்கினார். கொமக்கம்பேடு ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஊராட்சிமன்ற தலைவர் வெங்கடேஸ்வரி தங்கராஜ் தலைமை தாங்கினார்.

செயலாளர் பாஸ்கர், எல்லாபுரம் மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளர் கோடுவெளி தங்கம் முரளி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், பூந்தமல்லி எம்.எல்.ஏ. ஆ.கிருஷ்ணசாமி கலந்துகொண்டு 2,790 ரேஷன்கார்டுதார்களுக்கு கொரோனா நிவாரண நிதியின் 2-ம் தவணையான ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கி பேசினார்.

Next Story