செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 14 பேர் உயிரிழந்தனர்
செங்கல்பட்டு மாவட்டத்தில கொரோனா தொற்றால் ஒரே நாளில் 14 பேர் உயிரிழந்தனர்.
வண்டலூர்,
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 497 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 52 ஆயிரத்து 257 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 46 ஆயிரத்து 491 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 14 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2261 ஆக உயர்ந்தது. இதில் 3,505 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 220 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 68 ஆயிரத்து 597 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 65 ஆயிரத்து 985 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
நேற்று சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்தனர். இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,126 ஆக உயர்ந்துள்ளது. 1,486 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story