தேவிகாபுரம் அருகே கிணற்றில் தவறி விழுந்து பட்டதாரி பெண் பலி
தேவிகாபுரம் அருகே கிணற்றில் தவறி விழுந்து பட்டதாரி பெண் பலி
சேத்துப்பட்டு
திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரம் அருகே உள்ள வீரசெம்மனூர் கிராமத்தை சேர்ந்தவர் பச்சையம்மாள் (வயது 22). பி.எஸ்சி. நர்சிங் படித்துள்ள இவர் மேய்ச்சலுக்காக மாடு ஓட்டிச்சென்றுள்ளார். அப்போது அவர் கிணற்றில் தவறி விழுந்து விட்டார். இவருக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில்மூழ்கி இறந்துவிட்டார்.
மகளை காணாததால் அவருடைய தாய் முனியம்மாள் தேடிப்பார்த்து, கிணற்றில் விழுந்திருக்கலாமோ என்ற சந்தேகத்தில் பொதுமக்கள் உதவியுடன் தேடிபார்த்தபோது பச்சையம்மாள் கிணற்றில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து சேத்துப்பட்டு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சென்று பச்சையம்மாள் உடலை மீட்டனர். சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி, சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜ, மற்றும் போலீசார் சென்று பச்சையம்மாள் உடலை ஆரணி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story