கொரோனா தொற்று குறித்து 12 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்திய வாலிபர்
கொரோனா தொற்று குறித்து 12 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்திய வாலிபர்
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டம் ஆதியூரை சேர்ந்தவர் தினகரன் (வயது 21). காதுகேளாத மாற்றுத்திறனாளியான இவர் மோட்டார் சைக்கிள் பந்தய வீரர் ஆவார். கொரோனா தொற்று குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தனது மோட்டார் சைக்கிளில் முககவசம் அணிய வேண்டும், கைகளை அடிக்கடி கழுவ வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என கொரோனா தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசாரங்களை அச்சடித்து ஓசூரில் இருந்த கடந்த ஏப்ரல் மாதம் 28-ந் தேதி விழிப்புணர்வு பிரசார பயணத்தை தொடங்கினார்.
தொடர்ந்து இந்திய எல்லையான லடாக் பகுதி வரை 12 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் மோட்டார்சைக்கிளில் சென்று அனைத்து பகுதிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி மீண்டும் கடந்த 15-ந் தேதி திருப்பத்தூருக்கு வந்து சேர்ந்தார்.
அவரை நேற்று முன்தினம் கலெக்டர் சிவன்அருள் பாராட்டி பொன்னாடை அணிவித்தார். மேலும் திருப்பத்தூர் மாவட்ட காது கேளாதோர் சங்க நிர்வாகிகளும் வாழ்த்து தெரிவித்தனர்.
Related Tags :
Next Story