வேலூர் மாவட்ட புதிய கலெக்டராக குமாரவேல் பாண்டியன் பொறுப்பேற்பு


வேலூர் மாவட்ட புதிய கலெக்டராக குமாரவேல் பாண்டியன் பொறுப்பேற்பு
x
தினத்தந்தி 16 Jun 2021 9:57 PM IST (Updated: 16 Jun 2021 9:57 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்ட புதிய கலெக்டராக குமாரவேல் பாண்டியன் பொறுப்பேற்பு

வேலூர்

தமிழக அரசு கடந்த 13-ந் தேதி வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் உள்பட 20 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தது. அதன்படி வேலூர் மாவட்ட கலெக்டராக பணிபுரிந்த சண்முகசுந்தரம் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக கோவை மாநகராட்சி கமிஷனர் குமாரவேல்பாண்டியன் நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று மாலை வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் குமாரவேல்பாண்டியன் பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், உதவி கலெக்டர் (பயிற்சி) ஜஸ்வர்யா, போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன், மாநகராட்சி கமிஷனர் சங்கரன் உள்பட அரசு அதிகாரிகள் புத்தகம், மரக்கன்றுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

Next Story