அன்னூரில் குப்பைகளுக்கு மர்மநபர்கள் தீ வைப்பு
அன்னூரில் குப்பைகளுக்கு மர்மநபர்கள் தீ வைத்தனர். இதனால் ஏற்பட்ட புகைமூட்டத்தால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
அன்னூர்
அன்னூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் தினந்தோறும் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் இந்த குப்பைகளை கொண்டு உரம் தயாரிக்க இடங்கள் தேர்வு செய்யப்படவில்லை.
இதனால் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் அன்னூர் பெரியகுளத்தின் ஒரு பகுதியில் கொட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை குளத்தில் கொட்டப்பட்டிருந்த குப்பைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததாக தெரிகிறது.
இதில், குப்பைகள் மளமளவென தீப்பிடித்து எரிதொடங்கியது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. கரும்புகை காரணமாக அந்த பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள் சுவாசிக்க முடியாமல், மூச்சு திணறலால் அவதிப்பட்டனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த அன்னூர் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குப்பைகளில் எரிந்த தீயை அணைத்தனர். இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story