ஒரே இடத்தில் பின்னி பிணைந்து நடனமாடிய பாம்புகள்


ஒரே இடத்தில் பின்னி பிணைந்து நடனமாடிய பாம்புகள்
x
தினத்தந்தி 16 Jun 2021 11:29 PM IST (Updated: 16 Jun 2021 11:29 PM IST)
t-max-icont-min-icon

ஆரல்வாய்மொழியில் 2-வது நாளாக ஒரே இடத்தில் பின்னி பிணைந்தபடி பாம்புகள் நடனமாடின. இதனை கண்ட சிலர் செல்பி எடுப்பதில் ஆர்வம் காட்டினர்.

ஆரல்வாய்மொழி:
ஆரல்வாய்மொழியில் 2-வது நாளாக ஒரே இடத்தில் பின்னி பிணைந்தபடி பாம்புகள் நடனமாடின. இதனை கண்ட சிலர் செல்பி எடுப்பதில் ஆர்வம் காட்டினர்.
பின்னி பிணைந்த பாம்புகள்
ஆரல்வாய்மொழியில் வடக்கூர் அகலி ஊற்றுக்கு செல்லும் சாலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் இரண்டு பாம்புகள் இணைந்து நடனமாடின. இதை அந்த பகுதியை சேர்ந்த மக்கள் வேடிக்கை பார்த்து ரசித்தனர். அப்போது, அந்த வழியாக வந்த நாய் ஒன்று குரைத்தபடி விரட்டியதால் அந்த பாம்புகள் பிரிந்து அருகில் இருந்த குளத்திற்குள் சென்றன. 
இந்தநிலையில் நேற்று காலை 11 மணிக்கு அந்த இரண்டு பாம்புகளும் மீண்டும் அதே இடத்தில் சாலையில் ஒன்றிணைந்தபடி நடனமாட தொடங்கின. 2-வது நாளாக பாம்புகளின் நடனத்தை பார்த்த பொதுமக்கள் திகைத்தனர்.
செல்பி எடுத்த மக்கள் 
அதில், சிலர் ஆர்வத்துடன் அந்த பாம்புகள் அருகே நின்றபடி, தங்களுடைய செல்போன் மூலம் செல்பி எடுத்தனர்.
மேலும் இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பூதப்பாண்டி வனச்சரகர் திலீபன் உத்தரவின்பேரில் வேட்டை தடுப்பு காவலர் ஜெகன் அங்கு விரைந்தார். மேலும் அங்கு பொதுமக்கள் கூட்டம் கூடியதால், உற்சாகமாக பின்னி பிணைந்து நடனமாடிய பாம்புகள், புதருக்குள் சென்று விட்டன. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.

Next Story