லாரி மோதி போலீஸ்காரர் பலி


லாரி மோதி போலீஸ்காரர் பலி
x
தினத்தந்தி 16 Jun 2021 11:32 PM IST (Updated: 16 Jun 2021 11:32 PM IST)
t-max-icont-min-icon

மானாமதுரை அருகே லாரி மோதி போலீஸ்காரர் பரிதாபமாக பலியானார்.

மானாமதுரை, ஜூன்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கீழப்பசலை கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 33). பரமக்குடி தாலுகா போலீஸ் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வந்தார். நேற்று முன் தினம் இரவு வேலை நிமித்தமாக இரு சக்கர வாகனத்தில் கண்ணன் சென்றார். மதுரை- ராமேசுவரம் நெடுஞ்சாலையில் மேலப்பசலை கிராமத்தின் அருகே வந்தபோது எதிரே வந்த லாரி மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.
இந்த விபத்து தொடர்பாக லாரி டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story