கோர்ட்டு வளாகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்
இளையான்குடி கோர்ட்டு வளாகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
இளையான்குடி,ஜூன்.
சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி இளையான்குடி வட்ட சட்ட பணிகள் குழுவின் சார்பில் இளையான்குடி கோர்ட்டு வளாகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜா தலைமையில் அலுவலகப் பணியாளர்கள், வழக்கறிஞர்கள் தங்களது குடும்பத்தினருடன் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். மருத்துவ முகாமை டாக்டர் சலாகுதீன் தலைமையில் சுகாதார ஆய்வாளர் பிச்சை மற்றும் செவிலியர் நிஷா ஆகியோர் நடத்தினர். இளையான்குடி வட்ட சட்டப் பணிகள் குழு இளவரசன் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
Related Tags :
Next Story