மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி 2 பேர் காயம்


மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி 2 பேர் காயம்
x
தினத்தந்தி 17 Jun 2021 12:13 AM IST (Updated: 17 Jun 2021 12:13 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி 2 பேர் காயம் அடைந்தனர்.

நொய்யல்
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே பாண்டமங்கலம் அங்காளம்மன் தெருவை சேர்ந்தவர் மருதமுத்து மகன் ஜெகதீஸ்வரன் (வயது 19). இவர் அங்கிருந்து தனது அக்கா வீடான கரூர் மாவட்டம் கட்டிபாளையம் வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து அவரது அக்கா வீட்டுக்காரரின் மோட்டார் சைக்கிளை வாங்கி கொண்டு உறவுக்காரரான மணி என்பவரது மகன் முகுந்தன் (10) என்பவரை பின்னால் அமர வைத்துக் கொண்டு கட்டிபாளையத்திலிருந்து தவிட்டுப்பாளையம் செல்வதற்காக சேலம் -கரூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்தார். அப்போது நாமக்கல் இருந்து கரூர் நோக்கி வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதுகுறித்து மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட முகுந்தன், ெஜகதீஸ்வரன் ஆகியோர் காயம் அடைந்தனர். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் காயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story