சஷ்டியை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு


சஷ்டியை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 17 Jun 2021 12:18 AM IST (Updated: 17 Jun 2021 12:18 AM IST)
t-max-icont-min-icon

சஷ்டியை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

வேலாயுதம்பாளையம்
வேலாயுதம்பாளையம் அருகே காகிதபுரம் குடியிருப்பில் சுப்பிரமணியர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சஷ்டியை முன்னிட்டு சுவாமிக்கு பால், தயிர், இளநீர் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.  பின்னர் சுவாமியை திருதேரில் அமர வைக்கப்பட்டு கோவிலை சுற்றி மூன்று முறை வலம் வந்தனர்.
இதேபோல் புன்னம்சத்திரம் அருகே பாலமலையில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் சஷ்டியை முன்னிட்டு சுவாமிக்கு பால், தயிர், பன்னீர் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.


Next Story