கொரோனா தடுப்பூசி முகாம்


கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 17 Jun 2021 12:21 AM IST (Updated: 17 Jun 2021 12:21 AM IST)
t-max-icont-min-icon

அருப்புக்கோட்டை பகுதியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமினை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.

அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டை ஒன்றிய பகுதிகளில்  கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாம் நடைபெறும் இடங்களில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் தடுப்பூசி போடும் பணிகள் குறித்தும், ஒன்றிய பகுதிகளில் தடுப்பூசி முகாம்கள் அமைப்பது குறித்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். ஆய்வின் போது வட்டார மருத்துவ அலுவலர் சஞ்சய் பாண்டியன், முன்னாள் நகர்மன்ற தலைவர் சிவபிரகாசம், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சுப்பாராஜ், ஒன்றிய செயலாளர்கள் பாலகணேஷ், பொன்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story