திசையன்விளை மார்க்கெட்டில் விற்பனைக்கு குவிந்த மீன்கள் விலை குறைந்ததால் மீன்பிரியர்கள் மகிழ்ச்சி


திசையன்விளை மார்க்கெட்டில் விற்பனைக்கு குவிந்த மீன்கள்  விலை குறைந்ததால் மீன்பிரியர்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 17 Jun 2021 12:27 AM IST (Updated: 17 Jun 2021 12:27 AM IST)
t-max-icont-min-icon

மீன்பிடி தடைக்காலம் முடிந்ததால் நேற்று திசையன்விளை மீன் மார்க்கெட்டிற்கு ஏராளமான மீன்கள் விற்பனைக்கு குவிந்தன. விலை குறைந்ததால் மீன்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திசையன்விளை:
மீன்பிடி தடைக்காலம் முடிந்ததால் நேற்று திசையன்விளை மீன் மார்க்கெட்டிற்கு ஏராளமான மீன்கள் விற்பனைக்கு குவிந்தன. விலை குறைந்ததால் மீன்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

மீன் மார்க்கெட்

நெல்லை மாவட்டத்தில் உவரி, கூட்டப்பனை, கூடுதாழை, இடிந்தகரை, கூத்தன்குழி, பெருமணல் உள்பட 10 மீனவ கிராமங்கள் உள்ளது. இங்கு சிறிய அளவு நாட்டுப்படகு மூலம் மீன்பிடி தொழில் நடைபெறுகிறது இங்கு கிடைக்கும் மீன்கள் திசையன்விளை மீன் மார்க்கெட் மற்றும் கேரளாவிற்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது.

இந்தநிலையில் விசைப்படகு மற்றும் இழுவை படகுகளுக்கு 61 நாட்கள் கடலில் சென்று மீன் பிடிக்க விதிக்கப்பட்டு இருந்த தடை காலம் முடிவடைந்து நேற்று முன்தினம் விசைப்படகு மற்றும் இழுவைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இதனால் நேற்று திசையன்விளை மீன் மார்க்கெட்டுக்கு மீன்கள் வரத்து அதிகமாகி விற்பனைக்கு குவி்ந்தன.

விலை குறைந்தது

இதன் காரணமாக வழக்கத்தை விட நேற்று விலை குறைவாக இருந்தது. 10 ரூபாய்க்கு 2 என விற்பனை செய்யப்பட்ட சாளை ரக மீன் நேற்று 5 முதல் 6 வரை விற்பனை செய்யப்பட்டது. இதே போல் கிலோ 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நெத்திலி மீன் ரூ.200-க்கும், 700 ரூபாய்க்கு விற்கப்பட்ட சீலா மீன் ரூ.500-க்கும், சிறிய ரக சீலா ரூ.300-க்கும் விற்பனையானது.

கிலோ 400 ரூபாய்க்கு விற்பனையான வலைமீன் ரூ.250-க்கும், கிலோ 700 ரூபாய்க்கு விற்கப்பட்ட பெரிய அளவிலான மாவுலா மீன் ரூ.500-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதே போல் அனைத்து ரக மீன்களும் வழக்கத்தை விட விைல குறைவாக விற்பனை செய்யப்பட்டது. இதே போல் மற்ற நாட்களில் 10 ரூபாய்க்கு 2 என விற்பனை செய்யப்பட்ட சாளை ரக கருவாடு நேற்று 10 ரூபாய்க்கு 7 முதல் 8 வரை விற்பனை செய்யப்பட்டது. மீன் விலை குறைந்ததால் மீன் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story