கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் கோவை
ஊரடங்கு தளர்வுகளுக்கு பின்னர் கோவை மாநகரில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. எனவே அதை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார் களா என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கோவை
ஊரடங்கு தளர்வுகளுக்கு பின்னர் கோவை மாநகரில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. எனவே அதை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார் களா என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது தொற்று குறைந்து வருவதால் ஊரடங்கில் சென்னை உள்பட 27 மாவட்டங்களுக்கு அதிகப்படியான தளர்வுகளும், கோவை உள்பட 11 மாவட்டங்களுக்கு ஒரு சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி கோவையில் தனியார் நிறுவனங்கள் 25 சதவீத ஊழியர்களுடன் பணியாற்ற அனுமதிக்கப்பட்டது.
மேலும் வாடகை கார்கள் மற்றும் ஆட்டோக்கள் குறிப்பிட்ட பயணிகளுடன் இயங்கவும் சலுகை வழங்கப்பட்டது. இதனால் மாநகரில் உள்ள பெரும்பாலான சிக்னல்கள் இயங்க ஆரம்பித்துள்ளன.
போக்குவரத்து நெரிசல்
ஆனால் ஊரடங்கு முழுவதும் தளர்த்தப்பட்டதைப்போல் கோவை மாநகரில் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, பொள்ளாச்சி சாலை, சத்தி சாலை, அவினாசி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.
இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்பதால் கொரோனா நோயாளிகளை அழைத்துச் செல்லும் ஆம்புலன்ஸ் மற்றும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகிறார்கள்.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-
கட்டுப்படுத்த வேண்டும்
வழக்கமாக உக்கடம் போலீஸ் நிலையத்தில் இருந்து ஆத்து பாலத்திற்கு 5 நிமிடத்தில் சென்று விடலாம். ஆனால் கடந்த 3 நாட்க ளாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் 30 நிமிடங்கள் ஆகிறது.
தற்போது செட்டிபாளையம் பைபாஸ் சாலை வழியாக சென்று கொண்டிருந்த லாரிகளும் இந்த சாலையில் வருவதால் கூடுதல் நெருக்கடி ஏற்படுகிறது.
மேலும் சாலையோரத்தில் சிலர் வாகனங்களில் பழங்கள் விற்பனை செய்து வருகின்றனர்.
இதுவும் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாகி விடுகிறது. எனவே அத்தியாவசிய தேவை இல்லாமல் வெளியே சுற்று பவர்கள் மீதும், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வகையில் வாகனங்கள் நிறுத்துபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுத்து போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story