திருச்சிக்கு 5-வது முறையாக ரெயில்வே அமைச்சகம் சார்பில் 80 டன் ஆக்சிஜன் வந்தது
ரெயில்வே அமைச்சகம் சார்பில் திருச்சிக்கு 5-வது முறையாக ரெயிலில் 80 டன் ஆக்சிஜன் வந்தது
திருச்சி,
ரெயில்வே அமைச்சகம் சார்பில் திருச்சிக்கு 5-வது முறையாக ரெயிலில் 80 டன் ஆக்சிஜன் வந்தது. அவை அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
ரெயில்வே அமைச்சகம்
இந்தியாவில் கொரோனா 2-வது அலையின் தாக்கத்தால் பலர் நோய் தொற்றுக்கு ஆளாக்கப்பட்டனர். இதனால், பல ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டது. மூச்சுத்திணறல் ஏற்பட்டு நோயாளிகள் பலர் இறந்தனர். எனவே, நாடு முழுவதும் 20 ஆக்சிஜன் ரெயில்கள் மூலம் பல்வேறு மாநிலங்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
திருச்சி முதலியார் சத்திரம் ரெயில்வே குட்ஷெட் யார்டுக்கு ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் கடந்த 5-ந் தேதி 80 டன் திரவ ஆக்சிஜன் ஒடிசா மாநிலத்தில் இருந்து வந்தது. அதன் பின்னர், 7-ந் தேதி 2-வது முறையாக மத்திய பிரதேச மாநிலம் ரூர்கேலாவில் இருந்து 80 டன் வந்தது. 3-வது முறையாக கடந்த 10-ந் தேதி 80 டன் மற்றும் 12-ந் தேதி 4-வது முறையாக 120 டன் ஆக்சிஜன் வந்தது.
5-வது முறையாக 80 டன் வருகை
இந்த நிலையில் 5-வது முறையாக மத்திய பிரதேச மாநிலம் ரூர்கேலா செயில் நிறுவனத்தில் இருந்து 4 சிலிண்டர் வேகன்களில் தலா 20 டன் திரவ ஆக்சிஜன் வீதம் மொத்தம் 80 டன் நேற்று காலை 8.20 மணிக்கு கொண்டு வரப்பட்டது.
திருச்சி குட்ஷெட் யார்டில் இருந்து டேங்கர் லாரிகளில் பரிமாற்றப்பட்டு அவை யார்டு நிலைய மேலாளர் ரவி, சூப்பிரண்டு பசுபதி ஆகியோர் முன்னிலையில் பல்வேறு ஊர்களின் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு ஆக்சிஜன் பிரித்து அனுப்பப்பட்டது.
அரசு ஆஸ்பத்திரிகள்
திருச்சி மகாத்மா காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு 16 டன், திருவாரூர், நாகை 13 டன், திண்டுக்கல், கரூர், நாமக்கல் 16 டன், தஞ்சாவூர் 16 டன், புதுக்கோட்டை 12 மற்றும் இதர ஊர்களின் ஆஸ்பத்திரிகளுக்கு 7 டன் என மொத்தம் 80 டன் ஆக்சிஜனும் பிரித்து அனுப்பப்பட்டன.
இதுவரை திருச்சி குட்ஷெட் யார்டுக்கு 440 டன் ஆக்சிஜன் வந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Related Tags :
Next Story