விபத்தில் கட்டிட தொழிலாளி பலி


விபத்தில் கட்டிட தொழிலாளி பலி
x
தினத்தந்தி 17 Jun 2021 12:53 AM IST (Updated: 17 Jun 2021 12:53 AM IST)
t-max-icont-min-icon

விபத்தில் கட்டிட தொழிலாளி பலியானார்.

சுரண்டை:

சுரண்டை சிவகுருநாதபுரம் பாரதியார் நகரை சேர்ந்த சுந்தரராஜன் மகன் சிவராமன் (வயது 19). கட்டிட தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் சேர்ந்தமரம் அருகே தனது கிராமத்தில் உள்ள நண்பர் வீட்டுக்கு சென்று விட்டு சுரண்டைக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

ஆனைகுளம் ரோட்டில் வந்தபோது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கீழே விழுந்தார்.    அருகில் இருந்தவர்கள் சிவராமனை மீட்டு 108 ஆம்புலன்சில் தென்காசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை சிவராமன் பலியானார். 

இந்த விபத்து குறித்து சுரண்டை சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் காளீஸ்வரி (பொறுப்பு) விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story