அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 5 பேர் பலியாகினர்


அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 5 பேர் பலியாகினர்
x
தினத்தந்தி 17 Jun 2021 2:21 AM IST (Updated: 17 Jun 2021 2:21 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 5 பேர் பரிதாபமாக இறந்தனர்

அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 83 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் கொரோனாவுக்கு அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 71, 60 வயதுடைய முதியவர்கள் 2 பேரும், 55, 40 வயதுடைய பெண்கள் 2 பேரும், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 63 வயதுடைய மூதாட்டி என மொத்தம் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 179 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 165 பேர் கொரோனாவில் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். தற்போது 697 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story