மோட்டார் சைக்கிள் விபத்தில் காண்டிராக்டர் சாவு
மோட்டார் சைக்கிள் விபத்தில் காண்டிராக்டர் சாவு
நாகர்கோவில்:
நாகர்கோவில் கீழபெருவிளை முத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜார்ஜ் (வயது 53), காண்டிராக்டர். இவர் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் பார்வதிபுரம் பாலத்தின் கீழ் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்ததாக தெரிகிறது. இதில் ஜார்ஜ் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அங்குள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜார்ஜ் பரிதாபமாக இறந்தார். இதைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story