சேலம் சரகத்தில் 10 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்- கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் உத்தரவு


சேலம் சரகத்தில் 10 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்- கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் உத்தரவு
x
தினத்தந்தி 17 Jun 2021 3:10 AM IST (Updated: 17 Jun 2021 3:10 AM IST)
t-max-icont-min-icon

சேலம் சரகத்தில் 10 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை பணி இடமாற்றம் செய்து கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் உத்தரவிட்டு உள்ளார்.

சேலம்:
சேலம் சரகத்தில் 10 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை பணி இடமாற்றம் செய்து கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் உத்தரவிட்டு உள்ளார்.
சேலம் சரகம்
சேலம் சரகத்தில் 10 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். அதன்படி சேலம் மதுவிலக்கு அமலாக்க பிரிவில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் சித்ரா, மாவட்ட குற்றப்பிரிவில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் சேலம் நகரில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர்கள் குமார், பிரவீன் குமார், அன்பழகன், சாந்தி ஆகியோர் கோவை சரகத்திற்கு மாற்றப்பட்டு உள்ளனர்.
மேலும் இ்ந்த சரகத்திற்கு உட்பட்ட கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கற்பகம் கோவை சரகத்திற்கு மாற்றப்பட்டு உள்ளார்.
உத்தரவு
அதேபோன்று தர்மபுரி மாவட்டம் கடத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சல்குமார், அரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், அரூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தராம்பாள் ஆகிய 3 பேர் சேலம் நகரத்திற்கு மாற்றப்பட்டு உள்ளனர். 
இதன்மூலம் சேலம் சரகத்தில் 10 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்பட கோவை மேற்கு மண்டலத்தில் மொத்தம் 30 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
இதற்கான உத்தரவை மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் பிறப்பித்து உள்ளார்.

Next Story