மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.
மேட்டூர்:
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக கடந்த 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அப்போது அணைக்கு வினாடிக்கு ஆயிரத்து 170 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. அதன்பிறகு அணைக்கு வரும் தண்ணீர் அளவு தினமும் குறைந்து வருகிறது. கடந்த 13-ந் தேதி 764 கன அடியாக இருந்த நீர் வரத்து, 15-ந் தேதி 489 கன அடியாக குறைந்தது. நேற்று முன்தினம் மேலும் குறைந்து அணைக்கு 315 கன அடி நீர் மட்டுமே வருகிறது. இதற்கிடையே டெல்டா பாசனத்துக்காக அணையில் இருந்து தினமும் 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. எனவே அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 94.87 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், நேற்று 94.25 அடியாக குறைந்துள்ளது.
Related Tags :
Next Story