சேலத்தில், இன்று காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெறும் இடங்கள்
சேலத்தில், காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் இன்று நடைபெறும் இடங்கள் விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
சேலம்:
சேலம் மாநகராட்சியில் கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நோய் பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அப்பகுதியில் உள்ள அனைவரும் பரிசோதிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி, நேற்று மாநகராட்சிக்கு உட்பட்ட 49 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டு 3 ஆயிரத்து 267 காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மாநகராட்சி பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் 11 மணி வரை காந்திநகர், பத்மாவதி காலனி, காமராஜர் தெரு, மல்லிகா நகர், அழகாபுரம் காட்டூர், என்.ஜி.ஜி.ஓ. காலனி, கள்ளிக்காடு பார்க் தெரு, கொய்யாத்தோப்பு, சத்தியமூர்த்தி தெரு, தம்பி காளியம்மன் கோவில் தெரு, பழனி செட்டி தெரு, ஓபுளி தெரு, புட்டாமெசின் ரோடு, பாரதி தெரு, ஸ்ரீரங்கன் தெரு ஆகிய பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
அதேபோல் இன்று காலை 11 மணி முதல் மதியம் 1 மணிவரை பெருமாள் மலை அடிவாரம், தர்ம நகர், இந்திரா நகர், முத்துசாமி தெரு, வஜ்ஜிரவேல் நகர், ராஜம் தெரு, சுப்பிரமணியபுரம் அனெக்ஸ், ஏ.வி. அய்யர் தெரு, ெரயில்வே கிழக்கு தெரு, பெரமன் தெரு, எல்லப்பன் தெரு, பச்சப்பட்டி மெயின் ரோடு, திருஞானம் தெரு, கொடம்பை காடு, கேசவன் தெரு, சிவசக்தி நகர் ஆகிய பகுதிகளிலும் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெறும். அதேபோல் பெரிய மோட்டூர், புதுரோடு, குறிஞ்சி தெரு, பார்வதிபுரம், மணிமேகலை தெரு, ராஜ கணபதி தெரு, மாரியம்மன் கோவில் தெரு, முகமது காசிம் தெரு, தில்லைநகர், ராஜகோபால் தெரு, பழைய பிள்ளையார் கோவில் தெரு, முனியப்பன் கோவில் தெரு, நக்கீரர் தெரு, ரங்காபுரம், தார்ப்பாய் காடு, போலீஸ்காரன் தெரு ஆகிய பகுதிகளிலும் இன்று மதியம் 2 மணி முதல் 5 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. சேலம் மாநகராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நடைபெற்று வரும் சிறப்பு மருத்துவ முகாம்களை அந்தந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.
Related Tags :
Next Story